அமைச்சர் பொன்முடியிடம் 6 மணி நேர விசாரணை நிறைவு

Minister Ponmudi

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கெளதம சிகாமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இதன்பின், அதிகாலை 3 மணி அளவில் அமைச்சர் பொன்முடி திரும்பினார். அமைச்சர் பொன்முடியிடம் நேற்று விடிய விடிய விசாரணை நடத்தியிருந்தது அமலாக்கத்துறை. இருப்பினும், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதனைத்தொடர்ந்து நுங்கப்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகம் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்றது.சுமார் 6 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை  முடிவுபெற்று இருவரும் வீடு திரும்பினர்.

அதிகாரப்பூர்வ தகவல் :

அமலாக்கத்துறை நேற்று நடத்திய சோதனை குறித்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி இவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.81.7 லட்சம் பணமும், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் (பிரிட்டிஷ் பவுண்ட்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கபட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்