மகளிர் உரிமை தொகை – விண்ணப்பங்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் : அமைச்சர் பெரியகருப்பன்

மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி.
2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.
நாளை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கவுள்ள நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக, அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பெரியகருப்பன், ஜூலை 24ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாம் தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.
மேலும் அவர் கூறுகையில், நடப்பாண்டில் இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு தொடங்கியுள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக மேலும் 21 லட்சம் பேர் வங்கி கணக்கு தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025