ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் – டி.ஆர்.பாலு!

ஆளுநரை திரும்பப் பெறவலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமு கசார்பில் நோட்டீஸ்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் (அல்லது) டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார்.
இந்தாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் துவங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடைய உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமான முறையில் நடத்துவது குறித்து இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பொருளாளர், நாடாளுமன்ற கழகக் குழுத்தலைவர் திரு.டி.ஆர்.பாலு, அரசியல் சட்டத்துக்கு புறம்பாகவும், அரசியல் சட்டத்தை சிதைக்கும் வகையில் செயல்படுவதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் அல்லது டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும் வகையில் இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை வேலையில்லா திண்டாட்டம், ஆளுநர் பிரச்சனைகளை எழுப்ப உள்ளோம் என பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். ஆனால், இதற்கு அரசு ஒப்பதல் அளிக்கிறதா என்று நாளை தான் தெரியும் என்று அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.