மணிப்பூர் கொடூரம்: கனிமொழி தலைமையில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து திமுக எம்.பி கனிமொழி தலைமையில் சென்னையில் ஜூலை 23ம் தேதி ஆர்ப்பாட்டம்.
மணிப்பூரில் நிகழ்ந்த கலவரங்களை தடுக்க தவறிய மத்திய பாஜக தலைமையிலான அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்து வரும் 23ம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.