‘மூளையை தின்னும் அமீபா’ – பரிதாபமாக உயிரிழந்த 2 வயது சிறுவன்…!

baby

அமெரிக்காவில் இரண்டு வயது சிறுவனின் மூளையை அமீபா என்ற மூளையை தின்னும் நோய் தாக்கிய நிலையில் உயிரிழப்பு. 

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு வயது குழந்தை மூளையை தின்னும் அரியவகை நோயான அமீபா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நீர்நிலைகளில் வாழும் அமீபா மூலம் இந்த மூளையை தின்னும் அரியவகை அமீபா என்ற நோய் பரவுகிறது. இந்த நோய் என்பது நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை தாக்கும். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் இரண்டு வயது சிறுவனின் மூளையை அமீபா என்ற மூளையை தின்னும் நோய் தாக்கிய நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்துள்ளார்.அவருக்கு மருத்துவர்கள் தீவிர  சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக அவரது தாய் கூறுகையில், கடந்த ஏழு நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.  இந்த நோயிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்