இலங்கை அதிபர் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடனான பேச்சுவார்த்தையில், இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மீனவர்கள் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த சத்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார பங்குடமையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நான் கலந்துரையாடியிருந்தேன்.
அத்துடன் சுற்றுலாத்துறை, எரிசக்தி, வர்த்தகம், கல்வி, நிதியியல் தொழில்நுட்பம் மற்றும் திறன்விருத்தி ஆகியவற்றில் தொடர்புகளையும் ஒத்துழைப்பினையும் மேலும் வலுவாக்குவதற்ககாகவும் நாம் செயலாற்றியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார பங்குடமையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நான் கலந்துரையாடியிருந்தேன்.
அத்துடன் சுற்றுலாத்துறை, எரிசக்தி, வர்த்தகம், கல்வி, நிதியியல் தொழில்நுட்பம் மற்றும் திறன்விருத்தி ஆகியவற்றில்…— Narendra Modi (@narendramodi) July 21, 2023