இலங்கையுடனான மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறை தான் கைகொடுக்கும்; பிரதமர் மோடி.!

இலங்கையுடனான மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நடக்க வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடனான பேச்சுவார்த்தையில், இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனஞ்செலுத்தப்பட்டது.
இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகப்படவேண்டுமென்பதை நாம் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். @RW_UNP
— Narendra Modi (@narendramodi) July 21, 2023
அப்போது மீனவர்கள் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்த நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் விவாதித்ததாக பிரதமர் கூறினார். மீனவர்களின் இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காணவேண்டும் என இரு தலைவர்களும் கூட்டாக தெரிவித்தனர்.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருடத்தை நிறைவுசெய்தா இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் மோடி, தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்தியாவின் அண்டை நாடு கொள்கையில் இலங்கைக்கு சிறப்பான இடம் இருப்பதாகவும், இரு நாடுகளின் பாதுகாப்பு நலன்களும், வளர்ச்சியும் மேலும் வளர்ந்துள்ளதாகவும் பிரதமர் மோடி இந்த சந்திப்பிற்கு பிறகு தெரிவித்தார்.