மணிப்பூர் கலவரம் – விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்!

மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ்.
மணிப்பூர் வன்முறை, அங்கு பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதலே நாளே மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கியது.
இதன்பின் மறுநாளும் மணிப்பூர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி உடனடியாக இரு அவைகளிலும் பேச வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அன்றும், அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார். மாநிலங்களவையில் பிற அலுவலல்களை ஒத்திவைத்து மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும். சுமார் 80 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் தொடரும் வன்முறையால் சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் திமுக எம்பி திருச்சி சிவா அளித்துள்ள நோட்டிஸில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025