தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்.!

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு.
மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் மாநில ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 10 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக நீட் தேர்வு எழுதிய சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.