இன்று மீண்டும் நாடாளுமன்ற அவைகள் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு.!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை கூட்டம் இன்று மீண்டும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Parliament session adjourn

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை கூட்டம் இன்று மீண்டும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கடந்த வாரம் தொடங்கிய இரண்டு நாட்களும் முடங்கியது. மணிப்பூர் வன்முறை விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியிலும், பிரதமர் மோடி மணிப்பூர் விவாதத்திற்கு வரவேண்டும் எனவும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை தொடங்கிய மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார்.