பி.எஸ்.எல்.வி சி56 ராக்கெட் ஜூலை 30ல் விண்ணில் பாய்கிறது!

PSLV-C56

சிங்கப்பூரின் டிஎஸ்-சார் உட்பட 7 செயற்கைக்கோள்களுடன், பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஜூலை 30-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.

பிஎஸ்எல்வி சி56 ராக்கெட் ஜூலை 30-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டின் DS SAR புவிநோக்கு செயற்கைகோள் மற்றும் 6 செயற்கைகோளுடன் PSLV C56  விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல், வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது இஸ்ரோ. அதன்படி, சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், சிங்கப்பூரின் டிஎஸ்-சார் உட்பட 7 செயற்கைக்கோள்களுடன், பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஜூலை 30-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது. இதில், டிஎஸ்-சார் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது.

இது சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆர்கேட் (24 கிலோ) உட்பட 6 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்