நாடாளுமன்றத்தில் தொடர் அமளி.! ஆம் ஆத்மி எம்.பி உடனடி சஸ்பெண்ட்.!

நாடாளுமன்ற இரு அவைகளிலும், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அமளியில் ஈடுப்பட்டார்.
சஞ்சய் சிங், மாநிலங்களாவை தலைவர் ஜக்தீப் தன்கர் இருக்கை வரை சென்று அமளியில் ஈடுபட்டதால் அவரை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைக்கால தகுதிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்வதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ளார்.