இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரமாக உள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்

இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரமாக உள்ளது என்று அறிவிப்பு.
இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரமாக உள்ளது என்றும், ஜூலை 1ம் தேதி படி, சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 56 லட்சத்து 71 ஆயிரமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் பதில் அளித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் அறிக்கையின்படி, மக்கள் தொகையில் சீனாவே முன்னிலையில் தொடர்கிறது.