ஜூலை 30ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இந்தவாரம் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என அறிவிப்பு.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்கள் நடைபெறும் நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பணி நாளுக்கு ஈடாக ஆகஸ்ட் 26ம் தேதி விடுமுறை நாளாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்டங்களுக்கும் உணப்பொருள் வழங்கல்துறை ஆணையாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.