என்எல்சி விரிவாக்க விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்பி சிவி சண்முகம் நோட்டீஸ்..!

nlc

என்எல்சி விரிவாக்க விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்பி சிவி சண்முகம் நோட்டீஸ்

கடலூரில் சேத்தியாத்தோப்பு அருகே விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.  மேலும்,  வளையமாதேவியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கு விவசாயிகள் , அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வருகிறது. கடலூர் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயின் நிலையில், என்எல்சி விரிவாக்க விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்பி சிவி சண்முகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  என்எல்சி பொது மக்களுக்கு முற்றிலும் எதிரானது, விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன; இந்த முக்கிய பிரச்னை குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்