உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன..! பிரதமர் மோடி..

உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில்தான் காணப்படுகின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சென்னையில், ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ப்ராஜெக்ட் லயன் மற்றும் ப்ராஜெக்ட் டால்பின் ஆகியவை தயாராக உள்ளன என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நமது கிரகத்தில் ஏழு பெரிய பூனைகளை பாதுகாப்பதற்காக இந்தியா சமீபத்தில் சர்வதேச பெரிய பூனை கூட்டணியை தொடங்கியுள்ளது.இது ஒரு முன்னோடி பாதுகாப்பு முயற்சியான புராஜெக்ட் டைகரில் இருந்து நாம் கற்றுக்கொண்டதை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.
மேலும், புராஜெக்ட் டைகர் திட்டத்தின் விளைவாக, உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில்தான் காணப்படுகின்றன. ப்ராஜெக்ட் லயன் மற்றும் ப்ராஜெக்ட் டால்ஃபின் திட்டத்திலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று கூறினார்.
சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணி (ஐபிசிஏ) பிரதமர் மோடியால் ‘புலிகளின் 50 ஆண்டு நினைவாக’ இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடகாவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.