பாரத மாதாவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்.. மதுரையில் சீமான் பேட்டி!

Seeman NTK

மணிப்பூர் சம்பவம் உலக அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என சீமான் பேட்டி.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரையில் மாவட்ட நிர்வாகிகளுடன் இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக அழைத்து  சென்று வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால், உலக நாடுகளில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இதில், வெட்கமில்லாமல் பாரத மாதாவுக்கு ஜெய் என்று கூறுகிறார்கள். நல்ல வேலை பாரத மாதாவுக்கு உருவமும் இல்லை, உயிரும் இல்லை, இல்லையென்றால் அவரையும் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பார்கள். அந்தவகையில்,  பாரத மாதாவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் தற்போது நிலவுகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான், இந்தியா பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா தான். இதில் இரண்டு மாநிலங்கள் தென் மாநிலங்களில் உள்ளது. இதனால்,  இந்தியா பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாட்டுக்கு என்ன திரும்பி தருகிறார்கள், பேரிடம் காலத்தில் கூட மத்திய அரசிடம் பிச்சை தான் எடுக்க வேண்டிய சூழல் தான் உள்ளது.

அனைத்து வரிகளையும் காட்டினாலும், அவசர தேவைகளுக்கு கூட நிதி அளிக்கமாட்டார்கள். ஏனென்றால், இங்குள்ள ஆட்சியாளர்கள், மாநில தன்னாட்சி என்று பேசி வருகிறார்கள். மாநிலத்திற்கு எந்த உரிமை இருக்கிறது? வரி, கல்வி, மருத்துவம், மின் விநியோகம், சாலை பராமித்தால் என அனைத்து போய்விட்டது. சும்மா பேச்சுக்கு மாநில சுயாட்சி, தன்னாட்சி பேசிக்கொண்டு இருக்கலாம் என்றார்.

மேலும், ஒரு பிரச்சனை வந்தால், சிபிஐ விசாரணை கேட்கப்போறோம் என்று கூறுவது கேவலமாக இல்லையா? எதற்கு மாநில உரிமை பற்றி பேச வேண்டும். மாநில காவல்துறை என்ன செய்கிறது. அதுவும் காவல்துறையை வைத்திருக்கும் முதல்வர்கள் பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது என விமர்சித்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை என்ன ஆனது? என கேள்வி எழுப்பிய சீமான், ஒரு பிரச்சினை வந்தால் சிபிஐ விசாரணை கோருகிறார்கள். சிபிஐ-க்கு மாற்ற போகிறோம் என கூறுகிறார்கள், மாற்ற போறார்களா? இல்லை ஏமாற்ற போறார்களா? எனவும் விமர்சித்தார். ஒரு முதலமைச்சர் வீட்டிலேயே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண குடிமகனுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது.

ஒரு நிமிடம் கூட கோடநாடு பங்களாவில் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது, ஆனால் சம்பவம் நடந்த அன்று மின்சாரத்தை துண்டிக்க செய்ய சொன்னது யார்? என பல்வேறு கேள்விகளை சீமான் எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவின் சாதனையை புத்தகமாக வெளியிட போகிறாராம் அண்ணாமலை, புத்தகத்தில் சாதனை என்று எழுத ஏதாவது ஒன்று இருக்கிறதா, கல்வி, மருத்துவம், நீர் இவற்றை தனியார் மயமாக்கியது தான் சாதனையா எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்