இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சீன விசா.? போட்டியில் இருந்து விலகிய தற்காப்புக்கலை வீரர்கள்.!

அருணாச்சல பிரதேச விளையாட்டு வீரர்களுக்கு சீன நாட்டு விசா வழங்கப்பட்டதால் போட்டியில் இருந்து தற்காப்புக்கலை வீரர்கள் விலகினர்.
இந்திய தற்காப்பு கலை வீரர்கள் இன்று சீனா செங்டுவில் நடைபெற இருந்த போட்டி தொடரில் பங்கேற்க இருந்தனர். இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சீனா செல்வதற்கு விசா விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பத்தில் சீன எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்துவிண்ணப்பித்த 3 வீரர்களுக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை.
அதற்கு பதிலாக ஸ்டேபிள்டு விசா அளிக்கப்பட்டது. அதாவது சீனா – வியட்நாம் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது போல இந்த விசா கொடுக்கப்பட்டள்ளது. இதனை கண்ட இந்திய விளையாட்டு குழு மத்திய அரசிடம் இதனை தெரிவித்துள்ள்ளது.
அதன் பின்னர், மத்திய அரசு அறிவுரைப்படி,தற்காப்புக் கலை குழு டெல்லி விமான நிலையத்தில் இருந்து திரும்பிவிட்டனர். சீனாவுக்கு செல்ல ஐந்து தடகள வீரர்கள், ஒரு பயிற்சியாளர் மற்றும் இரண்டு துணை ஊழியர்கள் அடங்கிய எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுதிட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பயிற்சியாளர் ராகவேந்திர சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், சீனாவின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களுக்கு மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்கும். சீனாவில் நடைபெற உள்ள சர்வதேச விளையாட்டு நிகழ்வில் இந்திய நாட்டின் சார்பில் சென்ற வீரர்கள் சிலருக்கு ஸ்டேபிள் விசாக்கள் வழங்கப்பட்டிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த விஷயத்தில் எங்களின் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, சீனத் தரப்பிடம் எங்களது வலுவான எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.