பருவமழையின்போது தடையற்ற மின் விநியோகம் – நிதி ஒதுக்க ஒப்புதல்…!

பருவமழையின்போது தடையற்ற மின் விநியோக செய்ய தி ஒதுக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பருவமழையின்போது தடையற்ற மின் விநியோகம் செய்யும் பொருட்டு அவசர கால பணிகளுக்கு நிதி ஒதுக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, இதற்காக சென்னை வடக்கு, தெற்கு, ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களுக்கு தலா ₹10 லட்சமும், 133 இயக்கப் பிரிவு அலுவலகங்களை உள்ளடக்கிய திருவலம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய இயக்கப் பிரிவு வட்டங்களுக்கு தலா ₹8 லட்சமும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.