பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம்.! தேமுதிக பொருளாளர் பிரேமலதா பங்கேற்கவில்லை.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயண துவக்க விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொள்ளவில்லை.
எண் மண் என் மக்கள் எனும் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். ராமேஸ்வரத்தில் நடைபெறும் இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள பாஜக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் பங்கேற்கவில்லை. தேமுதிக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் அக்கட்சியினர் கலந்து கொள்வார்கள் என தேமுதிக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை @annamalai_k ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார்.
அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் திரு.கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.(1-2)— Vijayakant (@iVijayakant) July 28, 2023