சந்தானம் ரிட்டர்ன்ஸ்? வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ விமர்சனம்!

நடிகர் சந்தானம் ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். ஏனென்றால், சமீப காலமாக அவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குளு குளு, ஏஜென்ட் கண்ணாயிரம், ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தது. இதனால், மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக தனக்கு ஏற்கனவே இரண்டு முறை வெற்றியை கொடுத்த ‘தில்லுக்கு துட்டு’ பார்முலாவை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
இம்முறை முதல் இரண்டு பாகங்களும் இயக்கிய ராம் பாலாவை தவிர்த்து பொது இயக்குனருடன் கைகோர்த்தார். பழைய கதை தான், ஒரு பெரிய பங்களா அதனுள் ஹீரோ சந்தானம் மற்றும் அவரது நண்பர்கள் மாட்டிக் கொள்கின்றனர். அங்கு நடக்கும் சிரிப்பு கதைக்களமாக அமைக்கப்பட்டிருந்தது. மற்றபடி, தில்லுக்கு துட்டு படங்களின் இரண்டு பாகத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படத்தின் தலைப்பு கூட டிடி ரிட்டன்ஸ் என்றுதான் வைத்துள்ளார் சந்தானம்.

இது பேய் படம் என்றாலும் அதில் சந்தானத்தின் வழக்கமக இறங்கி அடிக்கும் ஹியூமர் காமெடிகள் என வழக்கம் போல சொல்லி அடித்திருக்கிறார். இந்த வெற்றி இந்த சமயத்தில் அவருக்கு மிகவும் தேவையான ஒன்றாகவே அமையும். இதற்கு அடுத்ததாக இந்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த உள்ளார் நடிகர் சந்தானம்.

டிடி ரிட்டர்ன்ஸ் விமர்சனம்
படத்தின் கதைப்படி, பாண்டிச்சேரியின் ஒரு ஊர்க்கு ஒதுக்கு புறமாக அமைந்திருக்கும் ஒரு அரண்மனை மாளிகையில் தொடங்குகிறது. அங்கு ஒரு பிரெஞ்சு -இந்திய குடும்பம் ஒரு சூதாட்ட நிகழ்ச்சியை நடத்துகிறது. அங்கு தோல்வியடைந்தவர்களை குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்கள். பல ஆண்களை இழந்த பிறகு அந்த கிராம மக்கள் அந்த கொலைகார குடும்பத்தை கொன்று அந்த மாளிகையை எறிகின்றனர்.
பாண்டிச்சேரியின் ஒரு டானுக்கு சொந்தமான பணம் மற்றும் நகைகள் நடிகர் முனிஷ்காந்த் தலைமையிலான கும்பலால் கொள்ளையடிக்கப்படுகிறது. சிறிய நேரம் கழித்து அதனை, மோசடி செய்யும் கும்பல் மொட்டை ராஜேந்திரன் மற்றும் தங்கதுரை கொள்ளையடித்து செல்ல… பின்னர், அது சந்தானதின் கைக்கு வருகிறது. சந்தானத்தின் காதலிக்காக பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. அது வேறயாருக்கும் இல்லை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட டானிடம் தான் சந்தானம் கொடுக்க வேண்டும்.

தனக்கு கிடைத்த பணத்தை அவரிடம் கொடுக்க… இது தன்னுடைய படம் என்று அறிந்ததும் சந்தானத்தின் காதலியை சிறைபிடித்து வைத்துவிட்டு மீதமுள்ள பணத்தையு நகைகளும் வேண்டுமென கேட்கிறார். ஆனால், சந்தானத்தின் நண்பர்கள் அந்த பணத்தை எரிந்து போன மாளிகையில் மறைத்து வைத்துள்ளனர். இப்பொது, அங்கிருக்கும் பேய்களிடம் இருந்து தப்பித்து பணத்தை எடுத்துக்கொண்டு ஜெயிப்பாரா, தோற்றாரா என்பதுதான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மீதி கதைக்களம்.
பொதுவாக, சந்தானம் மற்றும் பேய்களுடனான நகைச்சுவைகள் எப்போதும் பார்வையாளர்கள் சிரிப்பை ஒருபோதும் நிறுத்தியது இல்லை. குளு குளு, ஏஜென்ட் கண்ணாயிரம்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பியிருக்கிறார் சந்தானம். சந்தானத்தின் பழைய பணியான, பாடி ஷேமிங், டபுள் மீனிங் கமெண்ட்ரி இல்லாமல், படத்தில் வரும் காட்சிகளுக்கு ஏற்றார் போல் டைமிங் கவுண்டர் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ப்ரேம் ஆனந்த்.

முழுக்க முழுக்க நகைச்சுவை ஸ்கிரிப்டை எழுதுவதோடு மட்டுமல்லாமல், அதை மிக உயர்ந்த தரத்தில் செயல்படுத்துவதில் அவர் தனது அபார திறமையை நிரூபித்துள்ளார். ரோஹித் ஆபிரகாம் படத்திற்கு விறுவிறுப்பாக இசையமைத்துள்ளார், பாடல்கள் மற்றும் BGM இரண்டும் சுவாரஸ்யமாக உள்ளன. தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு, ஏ ஆர் மோகனின் கலை இயக்கம் மற்றும் என்.பி ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு ஆகியவை பார்வையாளர்களின் அனுபவத்தை கொடுக்கிறது. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காமெடிகள் உங்களை வயிறு வலிக்க வைக்காமல் விடாது அந்த அளவிற்கு சிரிப்பலையால் நம்மை படம் இழுத்து செல்கிறது.