ஆந்திர மாநில முதலமைச்சர் பவன் கல்யாண்.? நடிகையின் பதிவால் எழுந்த சர்ச்சை.!

BRO Movie team - Andra CM Jagan Mohan Reddy

ஆந்திர மாநில முதலமைச்சர் என நடிகர் பவன் கல்யாணை நடிகை ஊர்வசி ரவுடேலா டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ப்ரோ. இந்த படத்தை தமிழ் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இன்று நடிகை ஊர்வசி ரவுடேலா தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி என்றும், ப்ரோ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டு, அதில் ஆந்திர மாநில முதலமைச்சர் பவன் கல்யாண் என குறிப்பிட்டு வாழ்த்து பதிவிட்டு உள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக தற்போது பொறுப்பில் இருப்பவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. பவன் கல்யாண் , ஜன சேனா எனும் கட்சியை நடத்தி வருகிறார். அவர் ஆளும்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அவர் ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும் பவன் கல்யாணை முதலமைச்சர் என ஊர்வசி கூறியது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்