கல்லூரி வளாகத்திற்கு வெளியே மாணவி படுகொலை..! குற்றவாளி கைது..!

Student massacre

டெல்லி மாளவியா நகரில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மாளவியா நகரில் உள்ள ஸ்ரீ அரபிந்தோ கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள பூங்காவில், 25 வயது உடைய கமலா நேரு கல்லூரி மாணவி ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ளார். இதன்பின் சம்பவ இடத்திலேயே அந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

இதன்பின் தகவல் அறிந்து, தெற்கு டெல்லியின் டிசிபி மற்றும் பிற மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து கூறிய டிசிபி சந்தன் சவுத்ரி, தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே 25 வயது இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உடல் அருகே இரும்பு கம்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்களது முதற்கட்ட விசாரணையில் சிறுமியை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார். இதனையடுத்து, மாணவியை கொலை செய்ததாக கூறப்படும் நபரை கைது செய்தனர்.

இந்த முழுப் பிரச்சினையும் காதல் மற்றும் திருமணத்தை மறுத்ததால் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் வேலையில்லாமல் இருந்ததால் பெண்ணின் குடும்பத்தினர் அவரை திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்தினார்.

இதையடுத்து மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞன், மாணவியை கொலை செய்துள்ளதாகவும் தெற்கு டெல்லியின் டிசிபி சந்தன் சவுத்ரி கூறினார். மேலும்,  அந்த இளைஞன் டெலிவரி செய்யும் பணிபுரியும் இர்பான் என போலீஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்