கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!
மு.க.முத்து மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூலை 18, 2025 அன்று காலமானார். திரைப்பட நடிகராகவும், திராவிட இயக்கத்தில் பங்களிப்பு செய்தவராகவும் அறியப்பட்ட மு.க. முத்து, 1970களில் “பிள்ளையோ பிள்ளை” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அன்ட் வகையில், இப்பொது மு.க. முத்து மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் செய்தியில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புச் சகோதரர் மு.க.முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.