குற்றச்சாட்டு பதிவு அடிப்படையில் அமைச்சாராக நீடிக்க சட்டத்தில் எந்த தடையும் இல்லை.!

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர் அமைச்சராக நீடிப்பதில் சட்டத்தில் எந்த தடையும் இல்லை என அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணையில், அமைச்சராக அவர் எந்த அடிப்படையில், அமைச்சராக நீடிக்கிறார் என அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்ததில், அரசு தரப்பு தன் வாதங்களை முன்வைத்தது.
அதன்படி அமைச்சரவைக்கு இணையான நிர்வாகம் நடத்தவும், தனிப்பட்ட முறையில் அதிகாரங்களை செயல்படுத்தவும் ஆளுநருக்கு, அதிகாரம் கிடையாது என்று அரசியல் சட்ட விதிமுறைகளை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டது .
மேலும் அமைச்சர் குற்றவழக்கில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் நீடிப்பதில் தடை விதிக்கப்படும் என்றும், குற்றச்சாட்டு அடிப்படையில் அவரை பதவியிலிருந்து நீக்க எந்த சட்டவிதிமுறைகளோ, அரசியல் சாசனத்தில் குறிப்பிடவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து அதிமுக தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களில், சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது, அப்படியிருக்க எதன் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார். இது போன்று தமிழகத்தில் நடைபெறுவதால் தான் ஆளுநர் அவ்வாறு செந்தில் பாலாஜியை அமைச்சராக அனுமதிக்கமுடியாது என்று குறிப்பிட்டார் என வாதங்கள் வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க ஒருவார காலம் அவகாசம் வழங்கப்பட்டு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025