பாதயாத்திரை தொடங்கிவைக்க ராமேஸ்வரம் செல்கிறேன்; அமித்ஷா தமிழில் ட்வீட்.!

பாதயாத்திரையை தொடங்கி வைக்க ராமேஸ்வரம் செல்வதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்வீட்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின், “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை தொடங்கிவைக்க வருகை தரும் அமித்ஷா, ராமேஸ்வரம் செல்வதாக தமிழில் ட்வீட் செய்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பாஜக சார்பில் பாதயாத்திரை இன்று தொடங்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் திரு. @narendramodi அவர்கள் முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் @BJP4Tamilnadu நடத்தும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்.#EnMannEnMakkal
— Amit Shah (@AmitShah) July 28, 2023
இந்த பாதயாத்திரையை தொடங்கிவைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று ராமேஸ்வரம் வருகை தருகிறார். அதனை முன்னிட்டு அமித்ஷா தனது டிவீட்டில், பிரதமர் மோடியின் மாற்றத்திற்கான பாதையை ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச்செல்லும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை கொடியசைத்து தொடங்கிவைக்க இன்று ராமேஸ்வரம் செல்கிறேன் என தமிழில் பதிவிட்டுள்ளார்.