தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் வெயில் கொளுத்தும்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் வெயில் வாட்டினாலும், ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?
July 23, 2025