அகமதாபாத் மருத்துவமனையில் பெரும் தீ விபத்து 100 நோயாளிகள் வெளியேற்றம்

Hospital fire in Ahmedabad

அகமதாபாத் மருத்துவமனையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயாளிகள் வெளியேற்றம்.

அகமதாபாத்தின் ஷாஹிபாக் நகரில் உள்ள ராஜஸ்தான் மருத்துவமனையின் அடித்தளத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை  கட்டிடத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்,” என்று காவல் ஆய்வாளர் எம்.டி.சம்பவத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணியின் காரணமாக, அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் தீப்பிடித்து பெரும் புகையை வெளியேறியதாக  தீயணைப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை அகமதாபாத்தில் உள்ள  அறக்கட்டளை மூலமாக நடத்தப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்