கர்நாடக அமைச்சரை நிகழ்ச்சிக்கு அழைக்காததால் 2 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கர்நாடகா ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (RDPR) அமைச்சரான பிரியங்க் கார்கேவை நிகழ்ச்சிக்கு ஒன்றிக்கு அழைக்காத காரணத்தால் இரண்டு அதிகாரிகளை கர்நாடக அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ்களில் RDPR அமைச்சர் கார்கேவின் பெயரை குறிப்பிடாமல் நெறிமுறைகளை மீறியதற்காக, மூடுபித்ரி தாலுகா பஞ்சாயத்து செயல் அலுவலர் தயாவதி, இருவேல் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் கந்தப்பா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.