ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷ்ய கடற்படை தளத்தை தாக்கிய உக்ரேன்!

Ukraine attacked Russian

உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் சிவிலியன் கப்பலுக்கு துணையாக சென்ற தனது போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த ஒரு வருடமாக கடுமையான போர் நடந்து வருகிறது. உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து தானியங்களை பாதுகாப்பான ஏற்றுமதிக்கு அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ரஷ்யா கடந்த மாதம் மறுத்ததில் இருந்து கருங்கடல் மற்றும் அதை ஒட்டிய துறைமுகங்களில் மோதல்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், உக்ரைனின் தானிய துறைமுகங்களை ரஷ்யா தாக்கியது.

இந்நிலையில், ரஷ்ய ஏற்றுமதிக்கான முக்கிய மையமான நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ரஷ்ய கடற்படை தளத்தை இன்று அதிகாலை உக்ரேனிய கடல் ட்ரோன்கள் தாக்கி ரஷ்ய போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் கஜகஸ்தானின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகளை ரஷ்யா வழியாகக் கொண்டு செல்லும் குழாய் முனையத்தையும் கொண்டுள்ளது.

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியா ஒரு வருடத்திற்கு முன்னர் மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளன, ஆனால் சமீபத்திய வாரங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்