ராகுல் காந்தி வழக்கில் நீதிவென்றது – முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்!

Tamilnadu CM MK stalin

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2  தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் தொடர்வார் என்றும் வரும் திங்கள்கிழமையே நாடாளுமன்றம் செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பான நடவடிக்கையில் காங்கிரஸ் தலைமை இறங்கியுள்ளது. அதன்படி, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இதன் மூலம் சகோதரர் ராகுல் காந்தியை வயநாடு தக்கவைத்து கொண்டுள்ளது. நீதித்துறையின் வலிமை, ஜனநாயகத்தின் விழுமியங்களை பாதுகாப்பதை தீர்ப்பு உறுதி செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்