சென்னை மக்கள் கவனத்திற்கு…நாளை மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!

கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி முதல் திமுக சார்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாளை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் தொடங்குகிறது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள மவுன ஊர்வலத்தை ஒட்டி, மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பாரதிசாலை வழியாக திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மக்கள் நாளை காலை தங்களின் பயணத் திட்டத்தை மாற்றி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்