வெங்கட் பிரபு தயாரிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

மீசைய முறுக்கு படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஆனந்தின் இயக்குனராக அறிமுகமாகும் படத்தைத் தான் தயாரிக்கப் போவதாக இயக்குநர் வெங்கட் பிரபு கடந்த ஜூலை 30ஆம் தேதி சமூக வலைதளங்களில் அறிவித்தார்.
அனந்த் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் படத்திற்கு ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ (NOVP) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்.ஜே.விஜய், மோனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு புரோமோஷன் பணிகள் பயங்கரமாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, சுப்ரமணியபுரம், பாய்ஸ், சென்னை 28 ஆகிய படங்களை ரீகிரியேட் செய்து போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது நடிகர் சிம்பு இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பவானி ஸ்ரீ, RJ விஜய், RJ ஆனந்தி, யூடியூபர் இர்ஃபான் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை கலந்த என்டர்டெயினர் படமாக உருவாகவுள்ளது.
Thank q my brother for always being there for friends???????????????? https://t.co/0YVllcUB57
— venkat prabhu (@vp_offl) August 6, 2023