டாஸில் வெற்றி பெற்றும் இப்படியா ? இந்திய அணிக்கு 2 விக்கெட் அவுட்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டியில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இரண்டாவது டி20 கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது இந்திய அணியில் குல்தீப் யாதவ் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது இடது கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்தால் அவர் இரண்டாவது டி20 இல் விளையாடவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
குல்தீப் யாதவ் க்கு பதிலாக ரவி பிஷ்னோய் இப்போட்டியில் விளையாடுகிறார் அவரைத்தவிர முதல் டி20 யில் விளையாண்ட அனைவரும் இப்போட்டியில் விளையாடுகின்றனர்.
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தள்ளது.ஷுப்மான் 7 ரன்களுக்கு அல்ஜாரி ஜோசப் வீசிய பந்தில் ஹெட்மியரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,சூர்யகுமார் யாதவ் வந்தவேகத்தில் 1 ரன்னிற்கு கைல் மேயர்ஸிடம் ரன் அவுட் ஆகினார்.
இந்திய அணி :
இஷான் கிஷன் , ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா , சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
மேற்கிந்தியத் தீவு அணி :
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் , ரோவ்மேன் பவல் , ஷிம்ரோன் ஹெட்மியர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய் விளையாடுகிறார்