தடம் புரண்ட பயணிகள் ரயில்! கனமழையால் ஏற்பட்ட விபரீதம்!

கிழக்கு ஸ்வீடனில் 100க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில், ஹுடிக்ஸ்வால் என்ற நகரம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
கனமழையின் காரணமாக ரயில்வே கரை ஓரமாக அடித்துச் செல்லப்பட்டு, மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.