புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர் !

DroupadiMurmu - Puducherry

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று புதுச்சேரி வந்தடைந்தார். நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர்தர கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்.

தற்போது, புதுச்சேரியில் உள்ள ஆன்மீக மையமான அரவிந்தர் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அப்போது, துணைநிலை ஆளுநர், புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் உடன் இருந்தனர்.

பின்னர், அங்கிருந்த அரவிந்தர் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்திய அவர், கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்பதற்காக ஆரோவில்லுக்கு புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்