செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை செப்.30-க்குள் முடிக்க உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் இறுதி விசாரணையை நிறைவு செய்ய 6 மாத கூடுதல் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதுதொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறைக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
அதற்கு மேல் எந்த கால அவகாசமும் வழங்கப்படாது, விசாரணை முடிக்கவில்லை என்றால் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 6 மாத அவகாசம் கோரிய தமிழ்நாடு மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறையின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும், அவகாசத்தை தெரிவித்ததால், தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
இதனிடையே, செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பான வழக்கில் 2 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.