சோகம்..! இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் கப்பல் விபத்தில் மூழ்கி 41 பேர் பலி!

Lampedusa island in Italy

இத்தாலி: லம்பேடுசா தீவில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 45 பேருடன் செல்லப்பட்ட புலம்பெயர்ந்தோர் கப்பல் இன்று மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட படகு, இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக இந்த விபத்தில் இருந்து தப்பிய நான்கு பேர் கொண்ட குழு தகவல் தெரிவித்துள்ளது. வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்குள் நுழையும் போது இந்த ஆண்டு 1,800 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர் என்று UN அகதிகள் நிறுவனம் UNHCR தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் துனிசியா அல்லது அண்டை நாடான லிபியாவிலிருந்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்