ராகுல் காந்தி மக்களவையில் பேசும் போது பெரும்பாலும் அவரை காட்டாவில்லை – காங்கிரஸ் குற்றசாட்டு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தற்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், தன்னை மீண்டும் மக்களவை உறுப்பினராக மீண்டும் அமர்த்திய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நன்றி தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு, நான் மணிப்பூர் சென்றேன். நமது பிரதமர் இன்று வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் செல்லவில்லை, ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியா அல்ல.
இலங்கை அனுமனால் எரிக்கப்படவில்லை, ராவணனின் ஆணவத்தால் எரிக்கப்பட்டது. ராவணனை அழித்தது ராமன் அல்ல, அவரது ஆணவம். ராமாயணத்தில் கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பேச்சை மட்டுமே ராவணன் கேட்டார். இன்று அமித்ஷா மற்றும் அதானியின் பேச்சுகளை மட்டுமே கேட்கிறார் மோடி என விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், மக்களவையில் மணிப்பூர் குறித்து ராகுல் காந்தி 15நிமிடம் 42 வினாடிகள் பேசிய நிலையில், அரசின் சன்சத் தொலைக்காட்சி 11நிமிடங்கள் 8 வினாடிகள் சபாநாயகரை மட்டுமே காட்டியது. வெறும் 4நிமிடங்கள் மட்டுமே ராகுல் காந்தி காட்டப்பட்டார் என காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025