#BREAKING: செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் நோட்டீஸ்! நேரில் ஆஜராக சம்மன்!

கரூரில் மூன்றாவது முறையாக செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதாவது, கரூர்

Ashok Kumar house

கரூரில் மூன்றாவது முறையாக செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதாவது, கரூர் ராம்நகரில் உள்ள கட்டுமான பணி நடைபெற்று வரும் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இதுபோன்று, செங்குந்தபுரத்தில் உள்ள ஆடிட்டர் சதீஷ் குமார் அலுவலகத்தில் அமலத்துறையினர் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அந்த நோட்டீஸில் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரை குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கரூர் புறவழிச் சாலையில் கட்டி வரும் புதிய பங்களா குறித்த ஆவணங்களுடன் உரிமையாளர் நேரில் ஆஜராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.