ஆவணங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு முறையீடு!

அமலாக்கத்துறையின் 5 நாள் காவல் விசாரணை நேற்று முன்தினம் நிறைவு பெற்றதை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அனைத்து ஆவணங்களும் ட்ரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. எனவே, நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்க செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, அமலாக்கத்துறை தரப்பிற்கு தகவலை தெரிவிக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தரப்புக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவுறுத்தியுள்ளார்.