#BREAKING: தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு

MK STALIN

நாடு முழுவதும் 77வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடி கம்பத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியேற்றுவது இது 3வது முறையாகும். தேசிய கொடியை ஏற்றி வைத்தபிறகு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதாவது, சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. தியாகிகளின் ஓய்வூதியம் கடந்தாண்டு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது குடும்ப ஓய்வூதியமும் உயர்த்தப்படுகிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு “விடியல் பயணம்” என்று பெயர் சூட்டப்படுகிறது என்றும் நடப்பாண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் எனவும் அறிவித்துள்ளார்.  இதுபோன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆக.25 முதல் மாநில முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும்.

மாணவர்களின் உடல்நலன், மன வலிமையை காத்திடும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார். கலைஞர் பயின்ற திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க உள்ளேன் என்றும் இந்த திட்டத்திற்காக இந்தாண்டு ரூ.404 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்