பாலோடு நெய் கலந்து குடிப்பதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…?

நம்மில் குழந்தைகள் முதல் முதியவர்கள் அனைவருமே பால் என்றால் விரும்பி குடிப்பதுண்டு. இந்த பால் நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை அளிக்கிறது. அந்த வகையில், நெய்யும் நம்ம உடலுக்கு பல வகையான ஆரோக்கியத்தை அளிக்கிறது.
தற்போது இந்த பதிவில் பாலுடன் நெய் சேர்த்து அருந்துவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். நெய் மற்றும் பால் இரண்டும் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பல்வேறு அத்தியாவசியமான தாதுக்களின் வளமான ஆதாரங்களை கொண்டுள்ளது.
ஆய்வுகளின் படி தினமும் நெய்யை மிதமாக உட்கொள்வது நமது உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்களை உறிஞ்ச உதவுகிறது என்று கூறப்படுகிறது. அதைப்போல் பால் நமது உடலில் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவதற்கு உதவியாக இருக்கிறது.
செரிமான பிரச்சனை

இன்று பெரும்பாலானோர் சந்திக்கிற பிரச்சினை தான் இந்த செரிமான பிரச்சனை. பால் மற்றும் நெய் இரண்டையும் சேர்த்து பருகினால் உடலில் உள்ள நொதிகளின் சுரப்பை தூண்டுவதோடு, செரிமானத்தையும் துரிதப்படுத்துகிறது மற்றும் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தான், நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். அந்த வகையில், பால் மற்றும் நெய் சேர்த்து பருகினால் நமது உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, செரிமான அமைப்பில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.
மூட்டு வலி

நெய் என்பது நமது எலும்புகளுக்கு பலம் அளிக்கக்கூடிய ஒன்றாகும். இது ஒரு இயற்கை மசகு எண்ணெய் போல செயல்படுகிறது மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதற்கிடையில், பாலில் உள்ள கால்சியம் மூட்டு வலியைக் குறைப்பதோடு, எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இருமல்

பால் மற்றும் நெய் இரண்டிலும் ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உள்ளது. அவை தொண்டை புண், இருமல் மற்றும் தும்மல் ஆகியவற்றைக் குறைக்கின்றது. மேலும், பருவகால நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025