சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி!

தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் திருந்தி வாழவும் அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சிறைவாசிகளுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக தமிழக சிறைத்துறையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து சிறை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்கை திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை புழல், வேலூர், கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மத்திய சிறைச்சாலை அருகே சிறை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 5 பெட்ரோல் பங்குகளிலும் ஆண் கைதிகள் வேலைப்பார்த்து வருகின்றனர். கைதிகள் பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பதுடன், மாதந்தோறும் அவர்களுக்கான சம்பளமும் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் முழுவதும் பெண் கைதிகளால் நடத்தப்படும் நாட்டின் முதல் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் திறக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் சென்னையில் திறக்கப்பட்டது. 30 தண்டனை கைதிகள் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெற்று, மாதத்திற்கு தலா சுமார் ரூ.6,000 வரை ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மத்திய சிறை வளாகத்தில் இந்தியன் ஆயில் மற்றும் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட FREEDOM பெட்ரோல்/டீசல் விற்பனை நிலையத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். திறப்பு விழாவில் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, இந்திய ஆயில் தலைமை இயக்குனர் அசோகன் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் முதன் முறையாக 20 சிறை கைதிகளால் பெட்ரோல்/டீசல் விற்பனை நிலையம் நடத்தப்படுகிறது.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, சிறைச்சாலை ஒரு கைதியை தண்டிக்கும் அல்லது கண்டிக்கும் இடமாக அமையக் கூடாது. சிறைச்சாலையில் இருந்து வெளியே செல்லும் கைதிகள் தகுதிமிக்க, தரமான மனிதர்களாக உருவாக்கப்படுகிறார்கள். சிறைவாசிகளால் நடத்தப்படும் எரிபொருள் விற்பனை நிலையம் சிறந்த விற்பனை நிலையமாக செயல்படுகிறது. சென்னை மற்றும் கோவையில் Freedom பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் தொடங்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025