மேலும் 500 டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் – அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் முத்துசாமி இன்று மாலை ஆலோசனையில் மேற்கொண்டார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் வசூல் பணத்தை வைக்க மேலும் 500 டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும். முதல் முறையாக மதுபான கடைக்கு வருபவர்களை கண்டறிந்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
டாஸ்மாக் கடைகளுக்கான வாடகை, மின் கட்டணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். டாஸ்மாக் கடைகளுக்கு தனி மீட்டர், அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 மாநிலங்களில் இக்குழு நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025