பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது..! ரஜினிகாந்த் குறித்து திருமாவளவன் கருத்து..!

VCK Leader Thirumavalavan

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாவதற்கு முன்பு 9-ஆம் தேதியே ஒரு வார ஆன்மீக பயணமாக திட்டமிட்டு ரஜினிகாந்த் இமயமலை சென்றார். இந்த ஆன்மீக பயணத்தின் போது, பத்ரிநாத், துவாரகா,  ரிஷிகேஷ், பாபா குகை உள்ளிட்ட சில முக்கியமான  இடங்களுக்கு சென்றார்.

உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தை நடிகர் ரஜினி, அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் பார்த்தார். அதன்பின், ரஜினி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை  அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.  அப்போது யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து  ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன்  அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் நடிகர் ரஜினியை எவ்வளவு உயர்வாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரு நிகழ்வில் காட்டிவிட்டீர்கள்; பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.  இப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும். ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால் யோகி ஆட்சி போல்தான் இருந்திருக்கும் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்