நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான்களில் ஒருவரான தோனி, இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

MS Dhoni

சென்னை :பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான ‘கேப்டன் கூல்’ தோனிக்கு இன்று பிறந்தநாள். அந்த வகையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து MS தோனி கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ வைரலாகிறது.

அந்த வீடியோவில், தோனி ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் அணிந்து நண்பர்களுடன் கேக் துண்டுகளைப் பகிர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார், இதனை கண்டு ரசிகர்கள் அவரது கியூட் மொமண்ட்டுக்கு ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

unknown node

இதனிடையே, தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை கொண்டாடும் விதமாக ‘7 Shades of Dhoni’ என்ற 7 எபிசோடுகளைக் கொண்ட புரோகிராமை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிடுகிறது. இதன் புரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கம்பீர், ஷேன் வாட்சன் உள்ளிட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தோனியைப் பற்றி கூறும் கிளிப்ஸ் அதில் இடம்பெற்றுள்ளன.

unknown node