மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு!

மணிப்பூரில் இரு பிரிவு மக்களிடையே ஏற்பட்டுள்ள வன்முறையில் நேற்று 5 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த மூன்று வீடுகளிலும் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.
வீடுகளுக்கு தீ வைத்ததை கண்டித்து, அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுப்படுத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்த தலைநகர் இம்பாலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால்,அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இம்பால் நகரின் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில், இந்த செயல் உள்ளதாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மணிப்பூர் சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 29-ம் தேதி கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.