300 கிலோ ஹெராயின்.. ஏகே-47 பறிமுதல்.? நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு NIA சம்மன்.!

Actress Varalakshmi Sarathkumar

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் மீன்பிடி படகு சந்தேகபடும்படியாக வந்ததை கவனித்த கடலோர காவல்படையினர், அந்த படகை சோதனையிட்டனர். அந்த படகில்,  சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் 1000 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த படகில் வந்த 6 போரையும் கடரப்படை காவல்துறையினர் கைது செய்து தீவிர அமைப்புகள் பற்றி விசாரணை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு முகாமையான NIA-விடம் ஒப்படைத்தனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், இந்த கடத்தலுக்கு இலங்கையை சேர்ந்த விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சற்குணம் என்பவர் உதவியதும், இலங்கையை சேர்ந்த ஆதிலிங்கம் எனும் லிங்கம் உதவியதும் தெரியவந்தது.

இதில் ஆதிலிங்கம் என்பவரை கடந்த வாரம் சென்னையில் வைத்து NIA  அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், குன்றத்தூர் பகுதியில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவரும் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆதிலிங்கம் தொடர்புடைய குணசேகரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மொத்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் NIA அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் தங்கியிருந்த ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இதன் பெயரில் தற்போது நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு NIA சம்மன் அனுப்பியுள்ளது. அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies