Ramya Pandian: நடிகை ரம்யா பாண்டியனின் கேஷுவல் லுக்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியா கடைசியாக மம்முட்டிக்கு ஜோடியாக கடைசியாக நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காதல் சமீப காலமாக, கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.

சமீபத்தில், உள்ளாடை தெரியும்படி மாடர்ன் உடையில் சும்மா கலக்கலாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது. தற்பொழுது, எந்தவித கவர்ச்சியையும் காட்டாமல், கேஷுவலாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், இவர் நடித்துள்ள இடும்பன்காரி திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. மேலும், ‘ஆக்சிடெண்டல் ஃபார்மர் அண்ட் கோ’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இது சோனி லைவில் வெளியானது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025